நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்:

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும் 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

அமெரிக்கத் தயாரிப்பாளர்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் படங்களைத் தயாரிப்பதால் ஹாலிவுட் பேரிழப்பைச் சந்திப்பதாகவு டிரம்ப் கூறியுள்ளார். 

அந்தப் பேரிழப்பை ஈடு செய்யும் விதமாக அந்நிய நாடுகளில் படமாக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றார் அவர். 

டிரம்ப் உலகின் பல நாடுகளுக்கு இதற்கு முன் பல்வேறு இறக்குமதி வரிகளை விதித்திருக்கிறார்.

குறைந்த அளவே அமெரிக்கத் திரைப்படங்களை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதாகச் சீன அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

டிரம்ப்பின் புதிய வரி திரைப்படத்துறையில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset