நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பொதுத்தேர்தல் 2025: காலை 8 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் இன்று மே 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 8 மணி முதல் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. 

சுமார் 2.75 மில்லியன் சிங்கப்பூர் நாட்டு மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்கின்றனர். 

தீவு முழுவதும் 1,300 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கை சுமூகமாக நடைபெற ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

97 நாடாளுமன்ற இடங்களில் 92 நாடாளுமன்ற இடங்களுக்கு இன்று நேரடி தேர்தல் நடைபெறுகிறது. 

இன்றிரவு 8 மணி வரை சிங்கப்பூர் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என்று சிங்கப்பூர் தேர்தல் துறை தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset