நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை: காணொலி வைரல் 

சாவோ பாவ்லோ: 

விமான அறைக்குள் பெண் பயணி ஒருவர் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அடி, உதை கிடைத்தது.  இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. 

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் புறப்பட தயாரானது. 

இருப்பினும், விமானம் புறப்படுவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து திடீரென விமானி அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயன்றார். 

விமான ஊழியர் ஒருவரையும் கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மாறி மாறி கூச்சலிட்ட அந்த பெண்ணை, விமான பணியாளர் ஒருவர் சமாதானப்படுத்தினார். 

அப்போது மற்றொரு பயணி எழுந்து நின்று சத்தம் போட்டார். இதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் மற்றொரு பயணியுடன் சேர்த்து விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset