நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

360 மில்லியன் ரிங்கிட்டிற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த சந்தேகத்தில் டத்தோஸ்ரீ உட்பட நான்கு பேர் கைது 

புத்ராஜெயா:

சுமார் 360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகத்தின் பேரில், டத்தோஸ்ரீ  உட்பட நான்கு நபர்களைக் எம்ஏசிசி கைது செய்துள்ளது.

நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானாவர்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

முதற்கட்ட விசாரணையில், அனைத்து சந்தேக நபர்களும் 2016 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் இந்தச் செயல்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 1.30 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் சுகுக் நிதியைப் பயன்படுத்தி சுமார் 360 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தவறான உரிமைகோரல்களை நான்கு சந்தேக நபர்களும் சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அவர்கள் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ ஜைனுல் தருஸைத் தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்,

மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset