நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்

பூலாய்:

ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜொகூர் அமானா தலைவர் அமினோல்ஹுடா ஹாசன் இதனை கூறினார்.

பாக்டீரியா தொற்று காரணமாக பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கயாட்டிற்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்தது.

இதனால் அவர்  நேற்று இரவு இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டார்.

சுஹைசானின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும், ஆனால் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை.

சுஹைசான் நேற்று முதல் குடல் தொற்று, அதிக வெள்ளை இரத்த அணுக்களின் அளவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவரது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தது சுஹைசான் நிலையாக இருக்கிறார்.

ஆனால் நேற்று இரவு அவருக்கு அதிக காய்ச்சல் இருந்தது. அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset