நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டை மானியம் முழுமையாக நிறுத்தப்படும்

புத்ராஜெயா:

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.

கோழி முட்டைகளுக்கான விலைக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும்.

மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை, நாளை முதல் முட்டைக்கு மானிய விகிதம் 0.10 இலிருந்து 0.05 சென்னாக ஆகக் குறைக்கப்படும்.

உற்பத்திச் செலவுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோழி முட்டை உற்பத்தி போதுமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த நோன்பு பெருநாள் பண்டிகைக் காலம் முழுவதும் இந்த நிலைமை தெளிவாகத் தெரிந்தது.

அப்போது முட்டைகளின் விநியோகம் போட்டி விலைகளுடன் போதுமான அளவில் இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset