
செய்திகள் மலேசியா
தேசியக் கொடியை தவறாக அச்சிட்ட கல்வியமைச்சின் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டனர்: தலைமை செயலாளர்
பத்ரா ஜெயா:
தேசியக் கொடியை தவறாக அச்சிட்ட கல்வியமைச்சின் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இதனை உறுதிப்படுத்தினார்.
2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கையில் தேசியக் கொடியை காண்பிப்பதில் ஏற்பட்ட பிழை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவை இரண்டு தனித்தனி தரக் குழுக்களின்படி அடையாளம் காணப்படுகின்றன.
அதாவது தரம் 48 மேல், தரம் 48 க்குக் கீழ் என இரு பிரிவுகள் இதில் அடங்கும்.
கல்வி அமைச்சு ஜாலூர் ஜெமிலாங்கைக் காண்பிப்பதில் உள்ள பிழை குறித்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது
எனவே இப்போது பொது சேவைகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm