
செய்திகள் மலேசியா
நடைபயிற்சி மேற்கொண்டிருந்த 15 வயது சிறுவன் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பினான்
ஷா ஆலம்:
நடைப் பயிற்சி (ஜோக்கிங்) செய்து கொண்டிருந்த 15 வயது சிறுவன் கடத்தல் முயற்சி தப்பினான்.
இங்கு அருகிலுள்ள பிரிவு 13இல் அச் சிறுவன் ஜோக்கிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு நபர்கள் அச் சிறுவனை கடத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இரவு 10.42 மணிக்கு பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனிடமிருந்து சம்பவம் தொடர்பான புகாரை போலிசார் பெற்றனர்.
மாலை 5.15 மணிக்கு நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் தனியாக ஜோக்கிங் செய்து கொண்டிருந்தபோது,
புரோட்டான் சாகா, ஈஸ்வரா என நம்பப்படும் ஒரு பழைய சாம்பல் நிற கார் அவரை அணுகியது.
அதில் இரண்டு ஆண்கள் இருந்தனர் என்று ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மத் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி கத்தியைக் காட்டி, பாதிக்கப்பட்டவரை காரில் ஏறச் சொன்னார்.
அவர் காரில் ஏற மறுத்து விட்டு சந்தேக நபருடன் போராடினார்.
பின்னர் உதவி பெற அருகிலுள்ள காண்டோமினியம் காவலர் இல்லத்திற்கு தப்பிச் சென்றார்.
இந்த போராட்டத்தின் விளைவாக அந்த இளைஞனின் வலது கன்னத்தில் வெட்டுக் காயங்களும், வலது, இடது கைகளில் காயங்களும் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm