நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் கோயிலில் கடவுளுடன் பேசும் பக்தர்கள்

ஜோகூர் பாரு:

ஜொகூரில் தாவோயிஸ்ட் (Taoist) கோயில் ஒன்றில் மாசூ (Mazu) என்கிற கடவுளின் சன்னதி செயற்கை நுண்ணறிவை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

அங்கு பக்தர்களால் சன்னதியில் உள்ள கடவுளுடன் பேச முடியும். மாசூவிடம் பக்தர்கள் கேள்விகளைக் கேட்டு பதில்கள் பெற முடியும். அங்கு பக்தர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படும்.

மலேசியாவில் Aimazin எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் அந்த மாசூ சன்னதியை உருவாக்கியது. அதில் சீன நடிகை லியூ ஈஃபேய் (Liu Yifei) போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் உருவம் திரையில் தெரிகிறது. அது மலேசியா, சிங்கப்பூர் பக்தர்களைக் கவர்ந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் அது பிரபலம் அடைந்திருக்கிறது.

மாசூவின் 1065ஆம் பிறந்தநாளை முன்னிட்டு Aimazin நிறுவனம் செயற்கை நுண்ணறிவை வைத்து AI மாசூவை உருவாக்கியுள்ளது.

ஆதாரம் : South China Morning Post

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset