
செய்திகள் மலேசியா
சுங்கைப்பூலோ வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன: டத்தோஶ்ரீ ரமணன்
சுங்கைப்பூலோ:
சுங்கைப்பூலோ வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பிருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கம்போங் குபு காஜா பகுதி மக்களும், தஹ்ஃபிஸ் அஸாத்ரா மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்ப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு அமானா இக்தியார் மலேசியா வாயிலாக் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
150 குடும்பங்களுக்கு மின்சாரப் பொருட்கள், சமையலறைப் பொருட்களான அடுப்புகள், ரைஸ் குக்கர், மின் விசிறிகள், பானைகள், சட்டிகள் போன்ற உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் பாதிக்கப்பட்ட தஹ்ஃபிஸ் மையத்திற்கு மாணவர்கள் தங்கள் படிப்பை மிகவும் வசதியான, வளமான சூழ்நிலையில் தொடரும் வகையில் பல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
உதவி விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதில் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்துடன் நெருக்கமான ஒத்துழைத்த டத்தோ ஷாமிர் ஹஜிஸ் தலைமையிலான அமானா இக்தியார் மலேசியாவிற்கு எனது நன்றிகள்.
இது வெறும் உதவி மட்டுமல்ல.
மாறாக சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் எல்லா நேரங்களிலும் மக்களுக்கு உதவுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும்.
மேலும் எந்தவொரு சூழ்நிலையில் நாங்கள் ஒன்றாக இருப்போம் என்பதும் இதன் வாயிலாக நிரூபணமாகியுள்ளது.
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக உதவிப் பொருட்களை வழங்கிய பின்னர் டத்தோஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm