நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பல்லின பள்ளிகளின்  நடவடிக்கைகள் இன்றியமையாதவை: டத்தோ ஆரோன் அகோ

ஜார்ஜ் டவுன்:

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பல்லின பள்ளிகளின் நடவடிக்கைகள் இன்றியமையாதவையாக உள்ளது.

தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் இதனை கூறினார்.

அடிமட்ட அளவில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி ஒற்றுமை குறியீட்டை செயல்படுத்துவதும், அதில் பதிவு செய்யப்பட்ட நிலையான அதிகரிப்பும், மாணவர்கள்,  ஆசிரியர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் வளர்ந்து வரும் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், குறியீடு 6.27 (10 இல்) மதிப்பெண்ணைப் பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை 2022 இல் 7.10 ஆக உயர்ந்தது. மேலும் 2023 இல் 7.51 ஆக மேலும் மேம்பட்டது.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் முக்கிய முயற்சியாக இருக்கும் இந்த ஆய்வு சுல்தான் இட்ரிஸ் கல்வியில் பல்கலைக்கழகம், மலேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் மூலம் சாத்தியமானது.

சான்றுகள் அடிப்படையிலான நுண்ணறிவுகளில் நமது ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகளை அடித்தளமாகக் கொள்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

பினாங்கின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்வி உச்சி மாநாட்டின் போது டத்தோ ஆரோன் இதனை கூறினார்.

பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி அமைப்புகளுக்கு வெளியே ஒன்றாக வேலை செய்ய அனுமதிக்கும் வாய்ப்புகள்  அவசியமாகும்.

இந்த இனக் கலப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு சமூகங்கள், பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே வலுவான பிணைப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான கல்விச் சிறப்பு விருதுகளை வழங்கும் போது  ​​உச்சிநிலை மாநாடு பிராந்திய கல்வி, புதுமை,  சமூகக் கட்டமைப்பிற்கு அளித்த பங்களிப்புகளுக்காக சிறந்த நிறுவனங்கள் தனிநபர்களைக் கௌரவிக்கப்பட்டனர்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோவ், கோலாலம்பூர் பொருளாதார வியூக வாரிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் ஆகியோர் இதில் அடங்குவர்.

நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங்கிற்கு டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்  நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset