
செய்திகள் மலேசியா
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை.
அமெரிக்க டாலர் குறியீடு (DXY) சமீபத்தில் 100 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து நான்கு வார தொடர் சரிவு முடிவுக்கு வந்த நிலையில் ரிங்கிட்டின் மதிப்பு சிறிதும் மாறவில்லை.
இன்று 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் RM4.37-வர்த்தகமானது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இந்த நிலைக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ரிங்கிட்டின் மதிப்பில் பெரியளவில் மாற்றமில்லை என்று முவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அஃப்சானிசம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.
வரியின் தாக்கத்தைக் குறைக்க மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையை மேலும் தளர்த்தக்கூடும் என்றார் அவர்.
மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இது கடந்த வெள்ளிக்கிழமை 3.0431/0481 இலிருந்து ஜப்பானிய யென்னுக்கு எதிராக 3.0408/0550 ஆக வலுப்பெற்றது, மேலும் பவுண்டிற்கு எதிராக 5.8128/8214 இலிருந்து 5.8104/8369 ஆக உயர்ந்தது.
இருப்பினும், யூரோவிற்கு எதிராக 4.9596/9670 இலிருந்து 4.9608/9835 ஆகக் குறைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை 3.3228/3280 இலிருந்து சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.3224/3381 ஆக கிட்டத்தட்ட நிலையாக இருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm