நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ணம் இறுதியாட்டம்: மதியம் 2 மணி முதல் அரங்கத்திற்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன 

கோலாலம்பூர்: 

2024/2025 மலேசிய கிண்ண இறுதியாட்டம் இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில் புக்கிட் ஜாலில் நேஷனல் அரங்கிற்குச் செல்லும் சாலைகள் யாவும் கட்டங்கட்டமாக மூடப்படுகிறது

போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் அதனை சீராக கொண்டு செல்லவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க துறை தலைவர் ஏ.சி.பி. முஹம்மத் சம்சூரி கூறினார். 

சாலை தடுப்பு சோதனை நடவடிக்கையில் சுமார் 180 அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார், 

இன்றிரவு 9 மணிக்கு மலேசிய கிண்ண இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாட்டம் ஜொகூர் - ஶ்ரீ பகாங் ஆகிய இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset