செய்திகள் விளையாட்டு
சிறந்த கிரிக்கெட் வீரர் பும்ரா, வீராங்கனை ஸ்மிருதி மந்தனா: விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் அறிவிப்பு
லண்டன்:
பிரிட்டனில் இருந்து வெளியாகும், விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் எனப்படும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை வெளியிடும் புத்தகம், ‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ என அழைக்கப்படுகிறது. இது, ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் நிகழ்த்திய அருஞ்சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவையும், இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவையும் உலகின் சிறந்த வீரர், வீராங்கனையாக விஸ்டன் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில், 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக பும்ரா உருவெடுத்தார். சராசரியாக வெறும் 20 ரன் விட்டுக் கொடுத்து இந்த சாதனையை அவர் அரங்கேற்றினார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், பும்ரா, தனி ஒருவராக சிறப்பாக ஆடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை படைத்ததாக, விஸ்டன் புகழாரம் சூட்டி உள்ளது.
அதேபோல், இந்திய வீராங்கனை மந்தனா, 2024ல், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும், 1659 ரன்களை குவித்து மகத்தான சாதனையை நிகழ்த்தியதாக விஸ்டன் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்ததொரு சாதனை அது என்றும், ஒரு நாள் போட்டிகளில் அவர் 4 சதங்களை விளாசியது மற்றொரு அரிய சாதனை என்றும் விஸ்டன் புகழாரம் சூட்டியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 5, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
