நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு குறித்த  விவாதம்: மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

மலேசியா மீது அமெரிக்கா 24 விழுக்காடு பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்டது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் எதிர்வரும் மே 5ஆம் தேதி நடைபெறும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த விவாத நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்புரை வழங்குவார் என்று மடானி அரசாங்க பேச்சாளர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார் 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் இறுதியில் முதலீடு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் நன்றியுரை நிகழ்த்துவார் என்று அவர் குறிப்பிட்டார். 

இதில் அரசாங்கம், எதிர்கட்சி ஆகிய தரப்புகளின் கருத்துகள் கேட்கப்படும். 

மேலும், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கும் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல், பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக முன்னெடுப்புகள் அமைச்சரவை சார்பாக அறிக்கையாக வெளியிடப்படும் என்று லெம்பா பந்தாய் எம்.பியுமான அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset