நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடும்பு, ஆமைகளை கடத்த முயன்றதாக இந்திய நாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சிப்பாங்:

மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடும்பு, ஆமைகளை கடத்த முயன்றதாக இந்திய நாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றத்தை மறுத்து தமிழ்நாட்டின் பன்போலியைச் சேர்ந்த 50 வயதுடைய அப்துல் ஜாஃபர் மொஹிடின் அப்துல் காதர் விசாரணை கோரியுள்ளார்.

மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு  வன விலங்குகளை கடத்த முயன்றதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) இன் கீழ் அவர் மீது  எட்டு குற்றங்கள் சாட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 இன் கேட் எச்8 இல் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் 18 ஆண்டுகள் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்த அந்த நபர், நான்கு முதன்மை குற்றச்சாட்டுகளையும் நான்கு இதட குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.

நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஓத்மான் முன் அக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் கைருன்னிசா அஸ்ஸாரா கசாலி ஆஜரானார். அதே நேரத்தில் துணை அரசு வழக்கறிஞர் டேனியல் முனீர் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஜாமீன் மனுவை நிராகரித்து, வழக்கை மே 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset