நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலோக மறுசுழற்சி துறையில் அந்நிய நாட்டினர் ஆக்கிரமிப்பு; உரிய நடவடிக்கை வேண்டும்: மிம்தா

கோலாலம்பூர்:

உலோக மறுசுழற்சி துறையில் அந்நிய நாட்டினர் ஆக்கிரமித்து வருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் இதனை கூறினார்.

இத்துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை என நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இப்போது தான் அப்பிரச்சினைக்கு விடிவுக் காலம் கிடைக்கும் என நாங்கள் நம்பி வருகிறோம்.

இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்கள் தற்போது இத்தொழிலை சட்டவிரோதமாக செய்து வருகின்றனர்.

அவர்கள் உலோக மறுசுழற்சி பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இது தான் எங்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து,  வியாபாரம் செய்து, வரி கட்டி வரும் எங்களுக்கு  பல விதிமுறைகள் போடப்படுகிறது.

ஆனால் சட்டவிரோதமாக வியாபாரம் செய்யும் அவர்களுக்கு எதிராக  எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஆகவே இந்த விவகாரத்தை அரசாங்கம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என முத்தப்பன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset