நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலத்தின் சண்டாக்கானில் பயங்கர தீ விபத்து: 21 வீடுகள் தீக்கிரையாகின 

சண்டாக்கான்: 

சபா மாநிலத்தின் சண்டாக்கானில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் 21 வீடுகள் தீக்கிரையாகின. 

தீ சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டனர் என்று சண்டாக்கான் தீயணைப்பு, மீட்புப்படை துறை தலைவர் ஜஸ்ரி அப்துல் ஜல் கூறினார். 

தீ விபத்து தொடர்பாக தங்கள் தரப்புக்குக் காலை 10.40 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் காலை 10.58 மணிக்கு சம்பவம் இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தீ மள-மளவென வேகமாக பரவியதால் வீடுகள் தீக்கிரையாகின. புகார் கிடைக்கும் சமயத்தில் ஏழு வீடுகள் தீயில் முற்றாக அழிந்தது 

தீ விபத்து குறித்து தங்கள் தரப்பு விசாரணை நடத்தி வருவதாக ஜஸ்ரி குறிப்பிட்டார். 

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பத்து பூத்தேவில் உள்ள டேவானில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset