
செய்திகள் மலேசியா
சுங்கைபூலோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு; பாதிக்கக்கட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோவில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கக்கட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
நேற்று முதல் நீடித்த கனமழையைத் தொடர்ந்து சுங்கை பூலோ நாடாளுமன்றத்திற்குள் உள்ள கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிர், கம்போங் குபு காஜா, தாமான் ஸ்ரீ ஆலம், கம்போங் மெர்பாவ் செம்பாக் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலைமையை மதிப்பிடுவதற்காக நான் இன்று அந்தப் பகுதிக்கு விரைந்தேன்.
இன்று பிற்பகல் 1.20 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 4 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இம் மையங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயனுள்ள ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், சுங்கைபூலோ கெடிலான் தொகுதி, எம்பிபி, கிராமத் தலைவர்கள், தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அன்றாடத் தேவைகளை தீவிரமாக விநியோகித்து வருகின்றன.
தற்போதைய நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோ.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்.
தேவைகளை எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் அவசரகால பொருட்கள் சேமிப்பு மையத்தை உருவாக்கவும், அவசரகால பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு மிகவும் விரைவாகவும் வழங்குவதை உறுதி செய்யப்படும்.
கூடுதலாக, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு சிலாங்கூர் மாநில அரசை நான் கேட்டுக்கொள்வேன் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm