நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம்: வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது

ஷாஆலாம்:

தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறிய நிலையில்  வீடுகள், சாலைகளில்  வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.

அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கைபூலோ, சுபாங், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் இந்த கனமழையைத் தொடர்ந்து  தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறியுள்ளது.

ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளது.

அதே வேளையில் பெரும்பாலான சாலைகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இதனிடையே தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset