நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் ஶ்ரீ ஆலாமில் உள்ள நீர்த் தேக்கம் நிரம்பி வழிகிறது

சுங்கைபூலோ:

தாமான் ஶ்ரீ ஆலமில் உள்ள நீர்த்தேக்க அணை சமீபத்தில் உடைந்ததை தொடர்ந்து அங்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

இன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது என்று சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குனர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

கடந்த டிசம்பர் 29 அன்று சம்பந்தப்பட்ட நீர் தேக்கத்தின் சுவர்  இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அங்கு தற்போது பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

இன்று காலை 5.30 மணியளவில்  இந்த சம்பவம் நடந்ததாக தாமான் ஶ்ரீ ஆலம் குடியிருப்பாளர்களிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்தது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset