
செய்திகள் மலேசியா
அன்வாரின் சீர்திருத்த போராட்டம் இன்னும் புதைக்கப்படவில்லை: நூருல் இசா
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் முன்னெடுத்த சீர்திருத்த போராட்டம் இன்னும் புதைக்கப்படவில்லை.
பிரதமரின் மூத்த மகளும் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இசா இதனை கூறினார்.
கெஅடிலான் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து தனது தந்தை முன்னெடுத்து வந்த சீர்திருத்த போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
அப்போராட்டம் இப்போது 26 ஆண்டுகள் பழமையானது. இருந்தாலும் அது இன்னும் புதைக்கப்படவில்லை.
சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கான போராட்டத்தின் போது எதிர்மறையான விமர்சனங்களை வரவேற்கப்பட வேண்டும்.
சில தரப்பினரால் 'reformati' அல்லது 'reforbasi' என்று முத்திரை குத்தப்படும் என்பதையும் என் தந்தை அறிந்திருந்தார் என்று அவர் ஒப்புக் கொண்டார்.
அதே வேளையில் இதை செயல்படுத்த நேரம் எடுக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான போராட்டம் புதைந்து போகாமல் இருக்க கெஅடிலான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றிலும் சிலர் கெஅடிலானின் சீர்திருத்த முயற்சிகளை விமர்சித்திருப்பது உண்மைதான். அது நாம் கேள்வி கேட்க வேண்டிய முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன் என்று நூருல் இசா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm