நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன

ஷாஆலம்:

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய மாவட்டங்களில் 86 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும்  வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.

சுங்கை பூலோவின் கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிரில் 80 வீடுகள் மூன்று அடி ஆழத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கம்போங் பாரு சுங்கை பூலோவில் ஆறு வீடுகள் இரண்டு அடி ஆழம் வரை தண்ணீரில் மூழ்கின.

ஆனால் தண்ணீர் குறைந்து வரும் போக்கைக் காட்டியதால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

பெர்சியாரான் டாமாய் கம்போங் கெனாங்கன் சுபாங் ஜெயா இரண்டு அடி தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது.

இதே போன்று  பெட்டாலிங் ஜெயா ஜாலான் PJU 1A/46 பெட்டாலிங் ஜெயாவில் ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியிது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset