
செய்திகள் மலேசியா
மழலையர் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் ஜாலூர் ஜெமிலாங் சின்னத்தை அணியும் நடைமுறை செயல்படுத்தலாம்: ஆரோன் அகோ டாகாங்
சுங்கை பெட்டானி:
மழலையர் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் ஜாலூர் ஜெமிலாங் சின்னத்தை அணியும் நடைமுறை செயல்படுத்தலாம் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் முன்மொழிந்துள்ளார்.
சிறு வயது முதல் மழலையர் பள்ளி மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றை விதைக்கும் ஒரு சிறிய முயற்சியாக இந்நடவடிக்கை பார்க்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஆரம்பப் பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடைகளில் தேசியக் கொடி சின்னத்தை அணிவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இதனை மழலையர் பள்ளி மாணவர்களுக்கும் இந்நடவடிக்கையை விரிவுப்படுத்துவது சிறப்பு என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்ட மாணவர் சீருடையில் தேசியக் கொடி சின்னம் அணியும் செயல்முறை நேற்று தொடங்கியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm