நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் டான்ஸ்ரீ, டத்தோஶ்ரீ உட்பட 5 பேர் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் டான்ஸ்ரீ, டத்தோஶ்ரீ உட்பட 5 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமானின் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுக் குழு (அம்லா) தலைவர் டத்தோ முகமது ஹஸ்புல்லா அலி இதனை கூறினார்.

363.02 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மூன்று டுரியான் பழத்தோட்டங்கள், ஒரு ஹோட்டல், ஒரு மேம்பாட்டு நிறுவனம்,  ஒரு  செம்பனை பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவை எம்பிஐ இன்டர்நேஷனல் குரூப் முதலீடுகள் எனப்படும் அண்டை நாட்டில் போன்சி முதலீட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் புதிதாக முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

மேலும் சம்பந்தப்பட்ட எம்பிஐ முதலீட்டுத் திட்டத்தின் நிறுவனருடன் தொடர்புடையதாக நம்பப்படும் டான்ஸ்ரீ,  டத்தோஶ்ரீ பட்டங்களைக் கொண்ட தொழில்முனைவோர் உட்பட ஐந்து பேரை போலிசார் கைது செய்தது.

கடந்த 18 முதல் 21 ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கு, நாட்டின் வடக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட  சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீ,  டத்தோ ஶ்ரீ ஆகியோர் இந்த கும்பலின் பிரதிநிதிகள், வர்த்தக கூட்டாளிகள் என்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

இதில் டுரியான் பழத்தோட்டத்திற்கு சட்டப்பூர்வ பட்டா உள்ளது.

ஆனால் சட்டவிரோத பணத்தை முதலீடுகளுக்குப் பயன்படுத்தியதாகவும், மேலும் பல நடவடிக்கைகள் நடைபெற உள்ள நிலையில் விசாரணை இன்னும் தொடர்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset