
செய்திகள் மலேசியா
கெடாவில் நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் RM1 பில்லியனை அங்கீகரித்துள்ளது: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
கெடாவில் நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
அரசாங்கம் தொடர்ந்து இந்நிதியை வழங்கும் என்று இன்று சுகாதார அமைச்சகத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
நேற்று மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி வெளியிட்ட அறிக்கைக்கு அவர் பதிலளித்தார்.
கெடாவில் அரிசி தானியக் கிடங்குகளைப் பாதுகாக்க சிறப்பு ஊக்கத் தொகையாக மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் RM200 மில்லியன் நிதியை மாநில அரசு கோருவதாகக் கூறினார்
கெடாவில் உள்ள மூடா வேளாண் மேம்பாட்டு ஆணையம் (MADA) பகுதியில் இரண்டு ஆண்டுகளில் கட்டங்களாக செயல்படுத்தப்படும் ஐந்து பருவ நெல் நடவு திட்டத்தை ஆதரிப்பதற்காக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பிப்ரவரி 27-ஆம் தேதி பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm