
செய்திகள் மலேசியா
தென்னிந்திய பாரம்பரிய சுவையுடன் உணவுகள்; பிரிக்பீல்ட்ஸ் தள்ளு வண்டி உணவகத்தின் சிறப்பு: ஷர்மிலா
கோலாலம்பூர்:
தென்னிந்திய பாரம்பரிய சுவையுடன் உணவுகளை வாடிக்கையார்களுக்கு பரிமாறுவதே பிரிக்பீல்ட்ஸ் தள்ளு வண்டி உணவகத்தின் சிறப்பாகும்.
அவ்வுணவகத்தின் உரிமையாளர் ஷர்மிலா ஆனந்த் இதனை கூறினார்.
பிரிக்பில்ட்ஸின் ஸ்கோர்ட்ஸ் ரோட் வளாகத்தில் தள்ளு வண்டி உணவகம் கடந்த 14ஆம் தேதி சித்திரை புத்தாண்டு தினத்தன்று திறக்கப்பட்டது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இந்த உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அவ பாரம்பரியத்தின் சுவையும், அறுசுவை உணவின் ருசியும் இணைந்த உணவகமாக இது விளங்குகிறது. அழகான மற்றும் நேர்த்தியான உணவக சூழல் வயிற்றுக்கு மட்டுமல்ல மனதிற்கும் திருப்தி அளிக்கும்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவை நான் உருவாக்கியபோது இது ஒரு இந்தியர்களின் வணிக மையமாக உருவாக வேண்டும் என்பது என் கனவு.
அண்மைய காலமாகத் தொடர்ந்து பல கடைகளைத் திறப்பு விழா செய்யும் பொழுது உண்மையில் மனம் நிறைவாக இருக்கிறது என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
இதனிடையே என் தந்தை முன்பு உணவகம் நடத்தி வந்தார். அவர் வழியில் தற்போது நான் உணவகங்களை நடத்தி வருகிறேன்.
ஏற்கெனவே எர்பன் மசாலா உணவகம் கிள்ளான், சன்வேவில் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது உணவகமாக தள்ளு வண்டி தற்போது பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துபாயில் செயல்பட்டு வரும் தள்ளுவண்டி உணவகத்தின் கிளை உணவகம் தான் இது. தென்னிந்திய பாரம்பரியம், சுவையும் இங்கு உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.
இது தான் தள்ளுவண்டி உணவகத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆகவே மக்கள் திரளாக வந்து தள்ளுவண்டி உணவகத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று ஷர்மிளா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm