நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கினி பத்திரிகையாளர் நந்தா மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்

கோலாலம்பூர்:

மலேசிய கினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் வழக்கு குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

மார்ச் 5 முதல் முழு ஊதியத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்ட நந்தா, நேற்று மீண்டும் தனது பணியைத் தொடங்கினார்.

மலேசியா கினியின் இயக்குநர் குழு, நந்தாவுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்து பரிசீலிக்க ஒரு சுயாதீன உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதன் முடிவுகளை மதிப்பாய்வு செய்துள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விசாரணைக் குழுவின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்தது.

மற்ற நடவடிக்கைகளுடன், விசாரணைப் பத்திரிகையாளர் தொடர்பான சில பகுதிகளில் மலேசியாகினி தனது கொள்கைகளை வலுப்படுத்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு உறுப்பினர்கள் ஆண்ட்ரூ கூ, மஸ்ஜலிஸா ஹம்சா மற்றும் ஷமினி அறுமுகம் உள்ளிட்டோருக்கும், இந்த செயல்முறையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் தங்கள் நேரம் மற்றும் முயற்சிக்காக குழு நன்றியைத் தெரிவித்துள்ளது.

நந்தாவின் கட்டுரைகளை உருவாக்குவதில் ஆசிரியர் நெறிமுறைகளுடன் இணங்கியதை மதிப்பாய்வு செய்ய இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

மார்ச் 14 அன்று, நந்தா மனித கடத்தல் கும்பல்கள் குறித்து மேலும் அறிக்கைகளை வெளியிடாமல் இருக்க 20,000 வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு நடத்துமாறு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset