
செய்திகள் மலேசியா
சபா பாமோல் மணிமன்றத்தின் வருடாந்திர விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது
சண்டாகான்:
சபா பாமோல் மணிமன்றத்தின் வருடாந்திர விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விருந்து உபசரிப்பு சபாவில் அமைந்துள்ள சண்டாகான் தங்கும் விடுதியில் ஏப்ரல் 19-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
சிவேந்திரன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ரேமாண், திரு ஜூமார், திரு.மோகன்ராஜ், திரு ஃபிரான்கி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
அதுமட்டுமல்லாமல், 250 மன்ற உறுப்பினர்களும் இதர பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர்.
Movie Night என்ற கருப்பொருளை மையமாக கொண்டும் பாமோல் மன்தாப் என்ற ஸ்லோகனை முன்னிறுத்தியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிர்ஷ்ட குழுக்கள் ,கரோக்கே இசை நிகழ்ச்சி, ஆடல் பாடல் என பல சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm