
செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் நாட்டின் முதல் அதிபரின் மனைவி நூர் ஆயிஷா முஹம்மத் சலீம் காலமானார்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் நாட்டின் முதல் அதிபராக இருந்த யூசோஃப் இஷாக்கின் மனைவி நூர் ஆயிஷா முஹம்மத் சலீம் இன்று காலமானார். அவருக்கு வயது 91ஆகும்.
நூர் ஆயிஷா காலமானதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
சிங்கப்பூர் முதல் அதிபராக இருந்த யூசோஃப் இஷாக்கின் பக்கபலமாக நூர் ஆயிஷா செயல்பட்டார். மகளிர்களுக்கு முதன்மையான உதாரணமாக அவர் திகழ்ந்தார் என்று அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் மலேசியர்கள் சார்பாக சிங்கப்பூர் நாட்டிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நூர் ஆயிஷா இன்று அதிகாலை 4.28 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவு செய்தியை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm