நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 5ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு விவகாரம் விவாதிக்கப்படும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல் 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் மே 5ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. 

இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இரு தரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரி விதிப்பு தொடர்பாக விவாதம் நடத்த ஏதுவாக இருக்க நாடாளுமன்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கருத்துரைத்தார். 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்புகளை உலக நாடுகளுக்கு அறிவித்தார். 

அவ்வகையில் மலேசியாவுக்கு அமெரிக்கா 24 விழுக்காடு வரியை விதித்தது. இருப்பினும், இந்த வரி விதிப்பு தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset