
செய்திகள் மலேசியா
முழுமை பெறாத தேசியக் கொடி விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது: சைஃபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சியில் முழுமை பெறாத தேசியக் கொடியைக் காண்பிக்கும் காணொலி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அர்த்தங்களையும் நோக்கங்களையும் கொண்ட தேசியக் கொடி நாட்டின் அடையாளமாகும்.
அதனால், அதனை வெளியிடும் போது அலட்சியம், கவனக் குறைவு அல்லது மறதியும் தவிர்க்க வேண்டிய கூறுகள் என்று அவர் எச்சரித்தார்.
காரணம் இது போன்ற செயல்கள் நாட்டு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைஃபுடின் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm