
செய்திகள் மலேசியா
பான்-ஆசியா ரயில் திட்டம் குறித்து விவாதிக்க மே 2-ஆம் தேதி தாய்லாந்துக்கு அந்தோனி லோக் பயணம்
புத்ரா ஜெயா:
பான்-ஆசியா ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க மே 2-ஆம் தேதி தாம் தாய்லாந்து செல்லவிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மே 2 ஆம் தேதி தாய்லாந்து பிரதமருடன் தாம் சந்திப்பு நடத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியா-தாய்லாந்து எல்லையில் ஒத்துழைப்பு தொடர்பாக சமீபத்தில் பேங்காக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இடையே நடந்த கலந்துரையாடலில் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது.
ரந்தாவ் பஞ்சாங்க்-சுங்கை கோலோக் இடையிலான இரண்டாம் பாலத்தின் கட்டுமானம் பணி, புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் பாதுகாப்பு வளாகம் (ICQS) போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் என்றார் அவர்.
முன்னதாக, மலேசியா பான்-ஆசியா ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm