நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லீமா’25 கண்காட்சியை முன்னிட்டு 16,000க்கும் மேற்பட்ட ஃபெரி டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன

லங்காவி:

லீமா’25 எனப்படும் லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சியை முன்னிட்டு 16,000க்கும் மேற்பட்ட ஃபெரி டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. 

மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள லீமா’25 எனப்படும் லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

தற்போது வரை 16,116 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன என்று Ferry Line Ventures நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் Norhafiz Abdul Wahid  கூறினார். 

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஃபெரி 75,000 இருவழி பயணிகளை ஏற்றி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் 15,000 பயணிகள் ஃபெரி சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரித்தால் கூடுதல் பயணங்கள் சேர்க்கப்படலாம் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset