நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் ஸ்ரீ மூடா மக்கள் துயரத்துடன் நடத்திய போராட்டத்திற்கு இனவாதம், அரசியல் சாயம் பூச வேண்டாம்: உமா காந்தன்

ஷாஆலம்: 

தாமான் ஸ்ரீ மூடா மக்கள் துயரத்துடன் நடத்திய போராட்டத்திற்கு இனவாதம், அரசியல் சாயம் பூச வேண்டாம்.

அப்பகுதி மக்களின் பிரதிநிதியான உமா காந்தன் இதனை வலியுறுத்தினார்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினையால் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் தொடர் அவதிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நிம்மதி இழந்த பொதுமக்கள் நேற்று கண்டன மறியலை நடத்தினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பல்லின மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் 60க்கும் மேற்பட்ட மக்கள் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியை சந்திக்க ஆயிர் கூனிங் சென்றோம்.

அங்கு மந்திரி புசாரை எங்களால் சந்திக்க முடியவில்லை. அதனால் மகஜரை எங்களால் கொடுக்கவில்லை. 

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என மந்திரி புசார் அறிக்கையை வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் பல இலாகாக்களின் அதிகாரிகள் இன்று காலை ஸ்ரீ மூடாவுக்கு வந்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது மக்களின் கோரிக்கை மனுவும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே வேளையில் அடுத்த மாதம் மக்கள் சந்திப்புக்கு மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஸ்ரீ மூடா மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இருந்தாலும் இதற்கு முழு தீர்வு வேண்டும்.

அது வரை இம்மக்களின் போராட்டம் தொடரும் என்று உமா காந்தன் கூறினார்.

இந்நிலையில் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் துயரத்துடன் நடத்திய போராட்டத்தை இனவாதம், அரசியல் என சாயம் பூசுகிறார்கள்.

ஏன் மந்திரி புசாரின் செயலாளரே இதுபோன்று இனவாதமாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

யாரும் எங்கள் பின்னாடி இல்லை. யாரும் பணம் கொடுக்கவில்லை.

இது முழுக்க முழுக்க மக்கள் நீதி கேட்டு நடத்திய போராட்டம் என்று உமா காந்தன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset