
செய்திகள் மலேசியா
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை 265 மாணவர்கள் பயன் பெற்றனர்: நோவிந்தன்
சுங்கைசிப்புட் :
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் நடந்த இலவச கண் பரிசோதனையில் 265 மாணவர்கள் பயன் பெற்றனர்.
சுங்கை சிப்புட் தொகுதி கெஅடிலான் தலைவர் நோவிந்தன் இதனை கூறினார்.
ஓப்திமேக்ஸ் நிறுவனம் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்றது.
கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டதன் வாயிலாக சுமார் 265 மாணவர்கள் பயனடைந்தனர்.
அதே வேளையில் தேவைப்படுபவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளது.
பார்வை பராமரிப்பின் முக்கியத்துவம், கல்வி செயல்திறன் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுவதில் ஒரு சுருக்கமான உரையை வழங்கப்பட்டது.
இந்த முயற்சி, இளம் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வியை ஆதரிப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதனால் எந்த மாணவரும் பார்வைக் குறைபாடுகளால் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்று நோவிந்தன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm