நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திகள் ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் வெளிப்படலாம்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்: 

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திகள் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெளிப்படலாம்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அனல் பரக்கும் பிரச்சாரங்கள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த தேர்தலில் தேசியக் கூட்டணி சார்பில் உஸ்தாஸ் முஹைமின் போட்டியிருகிறார்.

மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொண்டு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஆயிர் கூனிங் ஒரு புதிய குரல் அமைந்துள்ளது.

மேலும் வலுவான மதப் பின்னணி, உயர்ந்த நேர்மை மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் உஸ்தாஸ் முஹைமின் நம்பிக்கைகளை நனவாக்குவார் என்று நம்பப்படும் ஒரு வேட்பாளராக உருவெடுத்தார்.

இதனால் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் மக்கள் எழுந்து நின்று மாற்றத்தை உருவாக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

ஆக வரும் சனிக்கிழமை வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி இந்த தேர்தலில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset