நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க நிறுவனங்கள், துறைகள் கோயில் ஹராம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: பிரதமருக்கு டத்தோஶ்ரீ சரவணன் கடிதம்

கோலாலம்பூர்: 

அரசாங்க நிறுவனங்கள், துறைகள்  கோயில் ஹராம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஶ்ரீ எம். சரவணன் கடிதம் வாயிலாக பிரதமருக்கு இதனை வலியுறுத்தியுள்ளார்.

தைப்பிங் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆலயம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு கடித்தத்தை வெளியிட்டுள்ளது.

அக்கடித்தத்தை சம்பந்தப்பட்ட ஆலயத்தை கோயில் ஹராம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கோயில் ஹராம் என்று எதுவும் இல்லை. கடந்த காலங்களில் அதிகமான ஆலயங்கள் தோட்டப் பகுதிகளில் இருந்தன.

ஆங்கிலேய, ஜப்பான் ஆட்சிக் காலங்களில் மக்கள் இந்ந ஆலயங்களை அமைத்து வழிப்பட்டு வந்தனர்.

மேம்பாட்டு பணிகளால் அவ்வாலயங்கள் தற்போது வெளியே தெரிகின்றன. அவ்வாலங்கள் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். இதெல்லான் வேறு விவகாரம்.

ஆனால் பொறுப்புமிக்க  அரசாங்க நிறுவனங்கள், துறைகள் கோயில் ஹராம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது.

குறிப்பாக இந்த வார்த்தை பயன்படுத்தி இந்திய சமுதாயத்தை மேலும் காயப்படுத்த வேண்டாம்.

ஆகவே பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும் கோயில் ஹரான் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் உத்தரவிட வேண்டும் என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset