
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத் தேர்தல் மலாய்க்காரர்களின் சகிப்புத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது: டத்தோஶ்ரீ சரவணன்
தாப்பா:
ஆயிர் கூனிங் தொகுதி மலாய்க்காரர்களின் சகிப்புத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற வாக்காளர்கள் போதுமான அளவு முதிர்ச்சியடைந்தவர்கள். அவர்கள் அற்பமான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை நிராகரிக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை தேசிய முன்னணியின் நிலையான பதிவு. அந்தப் பகுதியில் காட்டப்படும் உள்ளடக்கிய தலைமையை பல இன சமூகம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
தற்போதைய இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பன்றி பண்ணைகள், கசிவாகும் குழாய்கள் பிரச்சினைகளை எதிர்கட்சிகள் சர்ச்சையாக்கி வருகின்றனர்.
இதன் வாயிலாக எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சிகள் உண்மையான பெரிய பிரச்சினையான மக்களின் வளர்ச்சியிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகிறது.
சம்பவங்கள் எங்கும் நடக்கலாம். ஏன் புத்ராஜெயாவிலும் கூட கசிவு குழாய்கள் உள்ளன.
அவர்கள் உண்மையிலேயே மக்களின் சாம்பியன்களாக இருக்க விரும்பினால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு பன்றித் பண்ணைகளைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தப் பிரச்சினை இதற்கு முன்பு உள்ளூர்வாசிகளிடமிருந்து பெரிய எதிர்ப்புகளைத் தூண்டியதில்லை என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
--பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm