நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ மூடா மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

ஷாஆலம்:

ஸ்ரீ மூடா மக்களுக்கும் கோத்தா கமுனிங்  சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்க்கும்  இடையே  கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

ஸ்ரீ மூடாவில் தொடர் கதையாகி வரும் வெள்ளப் பிரச்சினையை தொடர்ந்து இன்று மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறிப்பாக இங்கு கூடியிருந்த மக்கள் மந்திரி புசார், நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவ்விடத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.

அங்கிருந்த உமா காந்தனை பார்த்து சட்டமன்ற உறுப்பினர் இங்கு வரவில்லை என கூறுகின்றனர்.

இப்போது நான் இங்கு உள்ளேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்று வேகமாக கேட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் அவரிடம் சரா மாறியாக கேள்விகளை எழுப்பினர்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்,

ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நிதிகளை ஒதுக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் எனது பணிகளை முறையாக செய்து வருகிறேன்.

ஆகையால் இப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset