நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மந்திரி புசார், நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க ஸ்ரீ மூடா மக்கள் ஆயிர் கூனிங் புறப்பட்டனர்: உமா காந்தன்

ஷாஆலம்:

சிலாங்கூர்  மந்திரி புசார், நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க ஸ்ரீ மூடா மக்கள் ஆயிர் கூனிங் புறப்பட்டனர்.

அம்மக்களுடன் சென்றுள்ள அவர்களின் பிரதிநிதி உமா காந்தன் இதனை கூறினார்.

ஸ்ரீ மூடா மக்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினை ஒரு தொடர் கதையாகி விட்டது.

இதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி தலையிட வேண்டும்.

அதே வேளையில் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாட் சாபு எங்களை சந்திக்க வேண்டும்.

இல்லையென்றால் பெரிய கண்டன போராட்டம் நடக்கும் என எச்சரித்தனர். ஆனால் மக்களை சந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

இதன் அடிப்படையில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 1000த்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவிலும் கையெழுத்திட்டனர்.

ஆனால் அவர்கள் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளதால் எங்களை சந்திக்க வரவில்லை.

அதனால் நாங்கள் ஆயிர் கூனிங் செல்கிறோம். கிட்டத்தட்ட நூறு பேர் அங்கு சென்று மந்திரி புசார், நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க உள்ளோம்.

குறிப்பாக மக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவையும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம்.

ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் எங்களை சந்தித்து உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளையும் மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இதுவே இந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உமா காந்தன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset