நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி, தேசிய கூட்டணி வேட்பாளர்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்: பவானி சவால் 

பெட்டாலிங் ஜெயா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலின் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

இந்நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளாக விளங்கும் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரங்களை அறிவிக்க முடியுமா ? அவர்களுக்கு பகிரங்கமாக சவால்களை விடுப்பதாக பி.எஸ்.எம் கட்சி சார்பாக போட்டியிடும் பவானி கே.எஸ். சவால் விடுத்தார் 

ஊழல் நிறைந்த மக்கள் பிரதிநிதி மக்களுக்குத் தேவையில்லை. ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 

ஆக, தேசிய முன்னணி வேட்பாளர், தேசிய கூட்டணி வேட்பாளர் தங்களின் சொத்து விபரங்களைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். 

39 வயதான பவானியிடம் மொத்தம் 21,248 ரிங்கிட் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். மேலும், தம்மிடம் பெரோடுவா பெஸா ரக கார் ஒன்றும் ஹொனொர் விவேக கைப்பேசி கொண்டிருப்பதாகவும் சொன்னார். 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

--மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset