
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்று (ஏப். 19) சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 20 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 22-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 4:59 pm
தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்: முதல்வர் ஸ்டாலின்
April 17, 2025, 8:04 pm
உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது: விஜய் பாராட்டு
April 16, 2025, 9:21 pm
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பொழிவு
April 16, 2025, 8:00 pm
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
April 16, 2025, 5:59 pm
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
April 16, 2025, 2:18 pm