நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியாவில் எலான் மஸ்க்கின் அதிவிரைவு இணைய சேவை

புது டெல்லி:

எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைகோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இந்தியாவின் இயக்குநர் சஞ்சய் பார்கவா கூறியது:
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு நாட்டில் பிராட்பேண்ட் சேவைகளை விரிவுபடுத்த ஸ்டார்லிங் திட்டமிட்டுள்ளது.

நீதி ஆயோக் அமைப்பு  மாவட்டங்களை அடையாளம் கண்டவுடன் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் இதற்கான கலந்துரையாடல் தொடங்கும். மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக செயல்படக்கூடிய 100 சதவீத பிராட்பேண்ட் திட்டத்தை நாங்கள் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

ஸ்டார்லிங் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையைப் பெற  இந்தியாவிலிருந்து 5,000 வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே ஆர்வம் தெரிவித்துள்ளனர். பிராட்பேண்ட் சேவைக்கு 99 டாலர் அல்லது ரூ.7,350 வைப்புத்தொகையை அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

சோதனை கட்டத்தில் இலவசமாக விநாடிக்கு 50 -150 மெகாபிட்ஸ் வேகத்தில் டேட்டா சேவையை வழங்குவதாக ஸ்டார்லிங் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset