செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒன்றிய அரசின் டீசல் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்
ஓசூர்:
டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் அனைத்தும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.
அதேநேரம், வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக வடமாநில பதிவெண் கொண்ட லாரிகள் ஓசூர் வழியாக வழக்கம்போல இயங்கின. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் படிப்படியாக இயக்கப்பட்டன.
இதனிடையே, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள அம்மாநில வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், அம்மாநில போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறும்போது, டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:24 pm
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2026, 10:35 pm
தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
January 15, 2026, 8:21 am
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு
January 14, 2026, 10:11 pm
பூ வாசம் மணக்கட்டும், புத்தெழுச்சி பரவட்டும்: மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
January 13, 2026, 3:57 pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
January 13, 2026, 8:59 am
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை
January 11, 2026, 5:52 pm
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
January 10, 2026, 1:20 pm
