செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
கொடைக்கானல்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் வருகை தரும் கொடைக்கானல் பகுதியில், தற்போது 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க, தமிழக காவல்துறையினர், நக்சல் தடுப்புப் பிரிவு படையினர் நவீன ரக துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் நிலவும் போர் சூழல் உள்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- முஸம்மில்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 6:39 pm
திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்: த வெ க தலைவர் விஜய்
April 21, 2026, 11:47 am
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ஏஐஎம்ஐஎம் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள்
April 20, 2026, 10:37 am
விதிமீறலா அல்லது விபத்தா?: விருதுநகர் வெடிவிபத்து குறித்து தீவிர விசாரணை தொடக்கம்
April 19, 2026, 7:10 pm
