
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேர்தல் சமயத்தில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வேண்டாம்
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் எந்தவொரு இனவெறுப்பு, அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று பேராக் மாநில காவல்துறை தலைவர் டத்தோ நூர் இசாம் நோர்டின் கூறினார்
இம்மாதிரியான நடவடிக்கைகள் பதற்றமான சூழலை உருவாக்கும் அதே சமயம் பொது அமைதிக்கு பெரும் மிரட்டலாக அமையும் என்று அவர் நினைவுறுத்தினார்
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் என்பது நிபுணத்துவம், ஒற்றுமையோடு நடைபெற வேண்டும். எந்தவொரு பிளவு அரசியலையும் இந்த இடைத்தேர்தல் மூலமாக முன்னெடுக்க கூடாது என்று தாம் கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்
தேர்தல் பிரச்சாரம் காரணமாக இதுவரை ஐந்து போலீஸ் பெர்மிட் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm