
செய்திகள் மலேசியா
16 வயது சிறுமியை கடத்திய நபரைப் போலிசார் சுட்டுக் கொன்றனர்
கிள்ளான்:
இளம் பெண்ணைக் கடத்தியதாக நம்பப்படும் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை பண்சார் புக்கிட் திங்கி ஜாலான் பாயு திங்கியில் நடைபெற்றது.
அதிகாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில் 21 வயது சந்தேக நபர் புரோட்டான் விரா காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
பணம் செலுத்தப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவரை செண்டாயனில் உள்ள ஒரு இடத்தில் இறக்கிவிட அவர் திட்டமிட்டிருந்தார்.
அப்போது போலிசார் சந்தேக நபர் அறிவுறுத்தப்பட்ட பிறகும் தனது வாகனத்தை நிறுத்த மறுத்து, அதற்கு பதிலாக போலிஸ் வாகனத்தை மோதினார்.
மேலும் துரத்திச் சென்ற அதிகாரிகள் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
போலீசார் திருப்பி சுட்டதில் அந்த ஆடவர் சம்பவ இடத்தில் இறந்து விட்டார்.
வாகனத்தை மேலும் ஆய்வு செய்தபோது ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் டத்தோ ஃபாதில் மார்சஸ் இதனை கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm