
செய்திகள் மலேசியா
அடுத்த இரு ஆண்டுகளில் பலம் வாய்ந்த கட்சியாக பிபிபி உருவெடுக்கும்: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
பல்லின மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியாகும்.
மலேசியர்களின் குரலாக பிபிபி கட்சி தொடர்ந்து ஒலிக்கும் வேளையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
பிபிபி கட்சி ஒரு கொசு கட்சியில்ல. நாங்கள் சின்ன கட்சி என்று கிண்டல் அடிப்பதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் பிபிபி கட்சி சந்தித்த சோதனைகள் மற்றும் சவால்கள் ஏராளம்.
நீதிமன்ற பணிகளையும் ஆர்ஓஎஸ் பணிகளையும் ஏறி இறங்கினோம்.
கடவுள் அருளால் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று இன்று பிபிபி கட்சியை வழிநடத்தி வருகிறோம்.
பிபிபி கட்சி மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே அனைத்து உறுப்பினர்களும் என்னோடு தோள் கொடுத்து கட்சியை பலமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
பிபிபி கட்சியின் 72 ஆம் ஆண்டு கொண்டாட்டம் கம்போங் அத்தாப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ லீ ஹாங், முன்னாள் செயலாளர் டத்தோ அஸ்பார் அலி, நடப்பு செயலாளர் டத்தோ இந்தர் ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, துணை பொருளாளர் டத்தோ அண்ட்ரூ, சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பல மாநில கட்சி தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm