செய்திகள் தமிழ் தொடர்புகள்
மருதமலை கோயில் வெள்ளி வேல் திருட்டு: தலைமறைவாக இருந்த சாமியார் கைது
கோவை:
கோவை மருதமலை கோயில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்குச் சொந்தமான மடம் ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளியால் ஆன வேலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மருதமலை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் மருதமலையில் குவிந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாமியார் வேடத்தில் வந்த நபர் வேல் கோட்டம் மடத்தில் இருந்து வெள்ளி வேலை திருடிச் சென்றார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பல்வேறு ஊர்களில் உள்ள மடத்திற்குச் சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை கைது செய்த போலீசார், அவரிடம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2025, 4:39 pm
SIRக்கு எதிராக சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை அறிவிப்பு
November 9, 2025, 3:47 pm
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 8, 2025, 5:23 pm
பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
November 5, 2025, 5:08 pm
